விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள டோல்கேட் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த வெங்கந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சதீஷ், 28; எழிலரசன், 28; விக்னேஷ், 18; அருள்குமார், 25; நான்கு பேரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறனர்.
கடந்த 4ம் தேதி, ஊரிலிருந்து வந்து, வெங்கந்தூருக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது, விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் உள்ள, டோல்கேட்டில் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டு, ஊழியர் நாகமுத்து என்பவரை தாக்கினர். புகாரின் பேரில், 4 பேர் மீதும், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, அவர்களை கைது செய்தனர்.