திருவிழாக்களுக்கு குழு அமைத்தால் நடவடிக்கை: ஹிந்து சமய அறநிலையத்துறை
Updated : ஜூன் 06, 2023 | Added : ஜூன் 06, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

மதுரை: ''கோவில்களின் விழாக்களை தனிநபர் அல்லது தனிப்பட்ட அமைப்பு கொண்டாட குழுக்கள் அமைக்கப்படக் கூடாது. சட்டத்திற்கு முரணாக திருவிழாக்குழு அமைத்தால், கோவில் செயல் அலுவலரை பொறுப்பாக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை கமிஷனர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.



latest tamil news



மதுரை மாவட்டம், அலங்காநல்லுார் வெள்ளைகங்கை, முருகன் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியுள்ளதாவது:

அலங்காநல்லுாரில் முனியாண்டி சுவாமி வகையறா கோவில் உள்ளது. இங்கு பங்குனி திருவிழா ஏப்ரலில் நடந்தது. குழு அமைத்து விழா நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது.
குழுவில் ஆளும்கட்சியினர் இடம் பெற்றனர். சிலரை முன்னிலைப்படுத்தும் வகையில் குழு அமைக்கப்பட்டது.

இதில் விதிமீறல் உள்ளது. குழு அமைத்தது ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிரானது.
குழுவிற்கு தடை விதிக்க வேண்டும். மூன்றாம் நபரின் தலையீடு இல்லாமல் கோவில் செயல் அலுவலர் தலைமையில் விழா நடத்த மதுரை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.






நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு நேற்று மீண்டும் இந்த வழக்கை விசாரித்தது.
அறநிலையத்துறை கமிஷனர் முரளீதரன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆஜராகி தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவிழாக் குழு அமைக்க ஹிந்து அறநிலையத்துறை சட்டத்தில் வழிவகை இல்லை. அவ்விதமான குழுவிற்கு எவ்வித சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லை. திருவிழாக்களை கோவில்களின் நிர்வாகத்தினரால் மட்டுமே நடத்த வேண்டும்.

தனி நபர் அல்லது தனிப்பட்ட அமைப்பு கொண்டாட திருவிழாக் குழுக்கள் அமைக்கப்படக் கூடாது.
சட்டத்திற்கு முரணாக திருவிழாக் குழு அமைத்தால் அதற்கு அந்தந்த கோவில்களின் செயல் அலுவலர், நிர்வாகியை பொறுப்பாக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது அனைத்து செயல் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், 'அரசு தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கு முடிக்கப்படுகிறது' என உத்தரவிட்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
spr - chennai,இந்தியா
06-ஜூன்-202317:08:43 IST Report Abuse
spr அதிகாரிகள் நேர்மையானவர்களாக இருந்தால் நிர்வாகம் சிறப்பாக நடக்கும் நம்மில் சிலரே அதிகாரிகளாக பணியாற்றுகிறோம் வாய்ப்பு கிடைத்தவர்கள் நேர்மையாக இருந்தால் தவறு நடக்குமா ஒரு சில ஆயிரம் பேர்களுடன் இந்தியா வந்த ஆங்கிலேயனுக்கு இந்தியாவின் மக்களால் உருவாக்கப்பட்ட காவற்துறை உதவாமல் ஜாலியன்வாலாபாக் சம்பவம் நடந்திருக்க முடியாது அரசு சட்டமியற்றினாலும் அதனில் உள்ள ஓட்டைகளைக் கண்டறிந்து தவறு நடக்க உதவுவது அதிகாரிகளின் தயவாலேதானே
Rate this:
Cancel
06-ஜூன்-202314:09:35 IST Report Abuse
மதுமிதா கலெக்ஷன் கரெக்டா வேணும் கோயில்வேணணாம்
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
06-ஜூன்-202313:34:22 IST Report Abuse
g.s,rajan That too only in Hindu Temples..???.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X