கோபி: கோபி, குப்பம்மாள் லே அவுட் பகுதியில், பட்டு வளர்ச்சித்துறை தொழில்நுட்ப சேவை மையம், வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. இதன் பின்னால் குறுகிய சந்தில், மீன் வளர்ச்சி துறை ஆய்வாளர் அலுவலகம், வாடகை கட்டடத்தில் முதல் தளத்தில் இயங்குகிறது. இந்த அலுவலகம் இயங்குவது பல துறை அதிகாரிகளுக்கே தெரியாது. முகவரி கூட இல்லாமல் இயங்கும், மீன் வளர்த்துறை அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றிய அருள்ராஜ், 4௪; மீன் குட்டை அமைக்க, 31 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது, மே,11ல் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு, அலுவலகம் திறக்காமல் பூட்டி கிடக்கிறது. அனைவரும் அறியும் வகையில், மீன் வளர்ச்சித்துறை அலுவலத்தை இடம் மாற்றி, உரிய அறிவிப்பு பலகை வைத்து, செயல்பட வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மீன் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கொழுஞ்சியப்பன் கூறுகையில், 'மீன் வளர்ச்சித்துறை அலுவலகம் குறித்து, முகவரி மற்றும் வழிகாட்டி பலகை உடனே வைக்கப்படும்' என்றார்.