நாமக்கல்: எருமப்பட்டியில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை, ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, நாமக்கல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
எருமப்பட்டி துணை மின் நிலையத்தில், இன்று மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, மேற்கண்ட மின் நிறுத்தம்
நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது.
காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், சிங்களக்கோம்பை, காவக்காரப்பட்டி, பவித்திரம் புதுார், செல்லிபாளையம், கஸ்துாரிப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என, அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாது அதில் தெரிவித்துள்ளார்.