நாமக்கல்: நாமக்கல்லில் காணாமல்போன இரண்டு சிறுமியர், கோவையில் மீட்கப்பட்டனர்.
நாமக்கல் அடுத்த தும்மங்
குறிச்சியை சேர்ந்த, 17, 15 வயதுடைய இரண்டு சகோதரிகள், கடந்த, 22ல் மாயமாகினர். இதுகுறித்து அவரது பெற்றோர்,
நல்லிபாளையம் போலீசில் புகாரளித்தனர். மாவட்ட போலீஸ் எஸ்.பி., ராஜேஸ் கண்ணனிடமும் பெற்றோர், உறவினர்கள் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த சிறுமியர், தங்களுடைய தாய்க்கு வேறொருவரின் மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதை கண்காணித்த போலீசார், மொபைல் போன் தகவல்களை கொண்டு அவர்கள் இருவரும் கோவை அடுத்த
சிங்காநல்லுாரில் இருப்பதை கண்டறிந்தனர். அங்குள்ள தனியார் பர்னீச்சர் கடையில் வேலை பார்த்து வந்த இருவரையும் மீட்டு, நாமக்கல்லுக்கு, நேற்று முன்தினம் இரவு, அழைத்து வந்தனர். பெற்றோர் திட்டியதால் ஆத்திரமடைந்த இருவரும் வீட்டை விட்டு வெளியேறியது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை
காப்பகத்தில் ஒப்படைத்தனர்.