நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரியில், யூத் ரெட் கிராஸ், செஞ்சுருள் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். அதில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு, மா, பலா, எலுமிச்சை, தேக்கு, கொய்யா, கொடுக்காப்புளி மற்றும் நீர் மருது போன்ற மரக்கன்றுகள் வழங்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மரங்களின் பங்களிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துணி
பை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கல்லுாரி செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் சந்திரசேகரன், யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் வெஸ்லி ஆகியோர் செய்திருந்தனர்.
* குமாரபாளையம் நகராட்சி சார்பில், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தின
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.