விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து தாலுகாக்களிலும் ஜமாபந்தி நடக்கிது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில், வருவாய் தீர்வாய முகாம், இன்று துவங்கி வரும் 16ம் தேதி வரை அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடக்கிறது.
கண்டாச்சிபுரம் தாலுகாவில் கலெக்டர் பழனி தலைமையிலும் விக்கிரவாண்டியில் டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, மரக்காணத்தில் சப் கலெக்டர் கட்டா ரவி தேஜா, வானுாரில் ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், செஞ்சியில் சப் கலெக்டர் விஸ்வநாதன், திண்டிவனத்தில் உதவி ஆணையர் (கலால்) சிவா தலைமையிலும் நடக்கிறது.
திருவெண்ணெய்நல்லுாரில் மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி, விழுப்புரத்தில் சப் கலெக்டர் (சிப்காட்) ஏகாம்பரம், மேல்மலையனுாரில் வடிப்பக அலுவலர் சரஸ்வதி தலைமையிலும் நடக்கிறது.
ஜமாபந்தி முகாம் நாட்களில், பொதுமக்கள், அந்தந்த தாலுகா அலுவலகத்தில், தங்களது மனுக்களை நேரடியாக அளித்து, விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
மேலும், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், திங்கட்கிழமை தோறும் வாராந்திர பொது மக்கள் குறைகேட்புக் கூட்டம் வரும் 12ம் தேதி நடைபெறாது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.