திருச்சி:சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த கிரிஜா, 27, திருச்சி, காந்தி மார்க்கெட் பகுதியில் தங்கி, தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றுகிறார்.
ஒரு புகார் தொடர்பாக, காந்தி மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷன் சென்ற அவரிடம், அங்கு இன்ஸ்பெக்டராக இருந்த சுகுமார், 45, கிரிஜாவின் மொபைல் எண்ணை வாங்கியுள்ளார்.
இரவில் தொடர்ந்து, கிரிஜாவுக்கு போன் செய்தும், அவரது வாட்ஸ் ஆப் செயலிக்கு ஆபாச படங்கள் அனுப்பியும், 'வீடியோ கால்' செய்தும் பாலியல் தொல்லை கொடுத்தார்.
போலீசார் புகார் அளித்தும் கண்டுகொள்ளாததால், நேற்று முன்தினம், திருச்சி கலெக்டர் அலுவலகத்தில், ஆதாரங்கள், படங்களுடன் கிரிஜா மனு அளித்தார். உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து சுகுமாரை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவிட்டார்.
இன்ஸ்பெக்டர் மீது புகார் கூறிய கிரிஜா, தன் தோழியுடன் மொபைல் போனில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதன்படி, இன்ஸ்பெக்டர் மீது கிரிஜா தான் ஆசைப்பட்டு, துரத்தி வந்தார் என, போலீசார் கூறுகின்றனர்.