பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த அரசடிக்குப்பம் - ஏ.புதுார் சாலை பணியை, எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
தமிழக முதல்வரின் சாலை விரிவாக்கம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஏ.புதூர் -- அரசடிக்குப்பம் வரை ரூ. 67 லட்சத்திலும், சந்தைதோப்பு - பனிக்கன்குப்பம் தார் சாலை ரூ. 77லட்சம் மதிப்பிலும் போடப்படுகிறது.
இப்பணிகளை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், ஊராட்சி தலைவர்கள் அஞ்சலை வீரபாண்டியன், ஆரோக்கியதாஸ், லட்சுமி நாராயணன், ஒன்றிய கவுன்சிலர் தமிழ்செல்வி சுந்தரவடிவேல், வர்த்தக அணி துணை அமைப்பாளர் லோகநாதன், மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், கிளை செயலாளர்கள் மச்சகாந்தன், முருகவேல், அருள் அன்பரசு, முருகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.