ராசிபுரம்: -ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரிக்கு, பாராட்டு விழா நடந்தது.
சேலம் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற உதயகுமாருக்கு பாராட்டு விழா; நாமக்கல் கிரீன் பார்க் பள்ளி இயக்குனர் குருவாயூரப்பன் எழுதிய நுால் வெளியீட்டு விழா; கோவை ராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவர்கள் சார்பில் உழவாரப்பணி தொடக்க விழா, ஆகிய முப்பெரும் விழா, ஆண்டகளூர்கேட்டில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலய தியான மண்டபத்தில் நடந்தது.
கோவை ராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவர்கள் சங்க, நாமக்கல் மாவட்ட துணைத்தலைவர் இன்ஜினியர் மாணிக்கம் தலைமை வகித்தார். இணைச்செயலர் பசுமை தில்லைக்குமார் வரவேற்றார். இணைச்செயலர் அருணாசலம், அறிமுகம் செய்து பேசினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், நாமக்கல் எம்.பி., சின்ராஜ், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் பாராட்டு மலரை வெளியிட்டு, உதயகுமாரை பாராட்டி பேசினர்.
'உழவாரப்பணியில் உள்ளம் கவர்ந்த கோவில்கள்' என்ற நுாலை, சேலம் ராமகிருஷ்ணா மிஷன் செயலர் சுவாமி யதாத்மானந்தர், கோவை பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் பொருளாளர் சுவாமி சஹானானந்த மகராஜ் ஆகியோர் வெளியிட்டனர். காசி விநாயகர் ஆலய கொங்குநாட்டு வேளாளர் அறக்கட்டளை தலைவர் கந்தசாமி, நாமக்கல் சாந்தி மருத்துவமனை டாக்டர் மாயவன், நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை தலைவர் மோகன், தொழிலதிபர் புதன்சந்தை முத்துராஜா உள்ளிட்டோர் பேசினர்.