நாமக்கல்: 'வரும் ஜூலை, 11ல், அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம், காணொலியில் நடக்கிறது' என, நாமக்கல் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
மேற்கு மண்டல அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம், வரும் ஜூலை, 11 காலை, 11:00 மணிக்க, மண்டல அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில், காணொலி காட்சி மூலம் நடக்கிறது. ஓய்வூதியர்கள், தங்கள் குறைகளை கடிதம், இணையதளம் மூலம், 'ரீஜினல் லெவல் பென்சன் அதாலத்' என்ற மேற்கோளுடன் சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கடிதங்கள், இணையதளம் மூலம் குறைகள் வந்து சேரவேண்டிய கடைசிநாள், வரும், 26. மேலும், ஓய்வூதியர்கள் கோட்ட அலுவலகத்தால் தீர்க்க முடியாத குறைகளை மட்டும் மண்டல அலுவலகத்துக்கு, கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளரின் பதில் கடிதத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், வழக்கு (வாரிசு) மற்றும் கொள்கை சம்பந்தமான விஷயங்களை அதாலத்தில் எடுத்துக்கொள்ள முடியாது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.