ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் அழகு நிலையத்தில் பதுக்கி கஞ்சா விற்ற தம்பதி உள்பட, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராசிபுரம் எல்.ஐ.சி., பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்ததில், அழகு நிலையம் ஒன்றில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்துவருவது தெரிய வந்தது. குறிப்பிட்ட அழகு நிலையத்தில் இருந்த, காளியம்மன் கோவில்தெருவை சேர்ந்த சதீஷ், 34, இவரது மனைவி அன்னலட்சுமி, 33, எல்.ஐ.சி., பழனிசந்து பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் நவரத்தினம், 36, ஆகிய, மூவரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.