பள்ளிபாளையம்: வெப்படைக்கு புதிதாக கட்டப்பட்ட போலீஸ் ஸ்டேஷன், நேற்று திறக்கப்பட்டது.
பள்ளிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் இருந்து, வெப்படை, பாதரை, எலந்தகுட்டை, படவீடு, ஆனங்கூர், மோடமங்கலம், ரங்கனுார் உள்ளிட்ட பல பகுதிகளை பிரித்து வெப்படை போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு, கடந்த, 2018ம் ஆண்டு மார்ச் மாதம் செயல்பாட்டிற்கு வந்தது. வெப்படை பஸ் ஸ்டாப் அருகே உள்ள சிறிய கட்டடத்தில் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வந்தது.
தற்போது செயல்படும் வெப்படை போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே, புதிதாக, 96.71 லட்சத்தில் அனைத்து வசதிகள் கூடிய புதிய கட்டடம் கட்டப்பட்டது. நேற்று காலை, 10:45 மணிக்கு, காணொலியில், டி.ஜி.பி., சைலேந்திரபாபு திறந்து வைத்தார். இதையடுத்து, வெப்படையில் புதிய போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கை, நாமக்கல் மாவட்ட எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து புதிய போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
திருச்செங்கோடு டி.எஸ்.பி., இமயவரம்பன், பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், வெப்படை எஸ்.ஐ., மலர்விழி மற்றும் போலீசார்
கலந்து கொண்டனர்.