டாஸ்மாக் ஊழியரிடம், ரூ.7.38 லட்சம் வழிப்பறி செய்த இருவர், சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை மாவட்டம், பூலுவபட்டியில், செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையில், வடிவேலாம்பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம்,40 விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். ஏப்., 30ம் தேதி இரவு, சண்முகசுந்தரம், விற்பனை தொகை, ரூ.7.38 லட்சத்துடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, சிலர் கத்தியை காட்டி மிரட்டி, பணத்தை பறித்துச் சென்றனர்.
ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிந்தனர்; மூன்று தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டன. விசாரணையில், பூலுவபட்டி அகதிகள் முகாமை சேர்ந்த அந்தோணிராஜ், மிலன் ஆகிய இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து, இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து, ரூ.40 ஆயிரம், 2 மொபைல் போன்கள், இரு பட்டாகத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணை நடக்கிறது.