ப.வேலுார்: பரமத்திவேலுார் தாலுகாவில், இடையூறாக சாலையில் வைக்கப்பட்டிருந்த, 'பிளக்ஸ்' பேனர்களை டவுன் பஞ்., நிர்வாகத்தினர் அகற்றினர்.
பரமத்தி, ப.வேலுார், பொத்தனுார் ஆகிய டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறாமலும், ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் வைக்கப்பட்டிருந்த, 'பிளக்ஸ்' பேனர்களை, டவுன் பஞ்., நிர்வாகத்தினர் அகற்றினர். பரமத்தியில் பஸ் ஸ்டாப் அருகே வைத்திருந்த விளம்பர பேனர்கள் முற்றிலுமாக அகற்றினர். அதேபோல், ப.வேலுார் நான்கு ரோடு சாலையிலும், முக்கோண பூங்கா மற்றும் சுல்தான்பேட்டை பகுதிகளில் வைத்திருந்த, 'பிளக்ஸ்' பேனர்களை ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து ஊழியர்கள் அகற்றினர். பொத்தனுார் எம்.ஜி.ஆர்., சிலை அருகிலும், நான்கு ரோடு சாலையில் வைத்திருந்த, 'பிளக்ஸ்' பேனர்களையும் அகற்றினர். பாண்டமங்கலம், வெங்கரை டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள, 'பிளக்ஸ்' பேனர்களை பஞ்சாயத்து நிர்வாகத்தினர் அகற்றவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.