வேலுார்:கூட்டுறவு வங்கி இரவுக் காவலாளியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் தரணம்பேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், இரவு காவலாளியாக, பாபு, 50, பணிபுரிந்து வருகிறார்.
இவர், கடந்த 5ம் தேதி இரவு, 10:00 மணிக்கு பணியில் இருந்தபோது, அவ்வழியாக சுண்ணாம்பேட்டையைச் சேர்ந்த சோபன்பாபு, 35, என்பவர் மது அருந்திக் கொண்டு சென்றார்.
அப்போது, திடீரென பாபுவிடம் வாக்குவாதம் செய்தார். திடீரென தான் வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை பாபு மீது ஊற்றி தீ வைத்தார். உடனடியாக சுதாரித்த பாபு, அங்கிருந்து தப்பி உயிர் பிழைத்தார். குடியாத்தம் போலீசார் சோபன்பாபுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.