புளியந்தோப்பு, பட்டாளம், நைனியப்பன் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமிநாராயணன், 42. மூன்றாண்டுக்கு முன் இவரது மனைவி இறந்தார். அவர்களுக்கு, 14 வயது மகளும், 13 வயது மகனும் உள்ளனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான லட்சுமிநாராயணன், வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், அவரது பெரியம்மாவின், 16ம் நாள் காரியத்தை, நேற்று முன்தினம் முடித்தார். அதன்பின், மது போதையில் வீட்டின் இரண்டாவது தளத்தில் படுத்து துாங்க சென்றார்.
அப்போது நிலைதடுமாறி, பக்கத்து வீட்டின் முதல் தளத்தில் விழுந்து, பலத்த காயமடைந்தார். உறவினர்கள், அவரை மீட்டு, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று அதிகாலை உயிரிழந்தார்.