மீனம்பாக்கம், சென்னை, மேற்கு மாம்பலம் ஆண்டியப்ப நாயக்கர் தெருவை சேர்ந்தவர் ரம்யா, 32. தனது மகள் ருத்ரா, 12, மகன் விக்னேஷ், 8 மற்றும் உறவினர்களான அனிதா, 20, ஜோதி, 28 ஆகியோருடன் நேற்று முன்தினம் மேல்மலையனுார் அம்மன் கோவிலுக்கு ஆட்டோவில் சென்றனர்.
ஆட்டோவை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த மணிகண்டன், 28, என்பவர் ஓட்டி சென்றார். அம்மனை தரிசித்து நேற்று அதிகாலை சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ரம்யா ஓட்டுனருடன் முன் பக்கம் அமர்ந்திருந்தார். மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே ஆட்டோ வந்த போது, துாக்க கலக்கத்தில் இருந்த ரம்யா தவறி கீழே சரிந்தார். அப்போது ஓட்டுனரின் சட்டையை பிடித்து இழுத்ததில், ஆட்டோ நிலைகுலைந்து பிளாட்பாரத்தில் மோதியது.
இதில், கீழே விழுந்த ரம்யா மீது ஆட்டோ ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த ரம்யா, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார்.
மவுன்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.