திருவொற்றியூர்,
திருவொற்றியூரில் இருந்து மணலிக்கு, நேற்று மதியம் 2:00 மணிக்கு சென்று கொண்டிருந்த சரக்கு லாரி, மாநகராட்சி லாரி நிறுத்தும் நிலையம் அருகே, டீசல் இல்லாமல் நின்றது.
குறுகிய சாலை என்பதால், இரு பக்கமும் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாநகர பேருந்துகள், கன்டெய்னர் லாரிகள், சரக்கு லாரிகள் நீண்ட துாரம் வரிசையில் காத்திருந்தன. இரண்டு மணி நேரத்திற்கு பின், டீசல் வாங்கி வந்து நிரப்பிய பின், சரக்கு லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது; போக்குவரத்து சீரானது.
லாரியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து போலீசார் ஒருவர்கூட அங்கு வந்து, நிலைமையை சரி செய்யவில்லை.