அம்பத்துார், கொரட்டூர் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என, ஜமாபந்தியில் சிறுவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சென்னை, அம்பத்துார் தாலுகா அலுவலகத்தில், நேற்று அம்பத்துார், கொரட்டூர் சுற்றுவட்டாரங்களுக்கான ஜமாபந்தி நடந்தது.
இதில் பங்கேற்ற பொதுமக்கள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட, வருவாய்த்துறை பிரச்னைகள் தொடர்பான மனுக்களை, துறை அதிகாரிகளிடம் அளித்தனர்.
அப்போது, கொரட்டூரைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் அவர்களுடன் வந்த சிறுவர் - சிறுமியர், 'கொரட்டூர் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்' என, பதாகைகள் ஏந்தி வந்து, அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.