நெம்மேலி கடல்நீர் குடிநீராக்கும் நிலையத்தில், பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், இன்று காலை முதல், 9ம் தேதி காலை வரை, குடிநீர் உற்பத்தி நிறுத்தப்படுகிறது.
இதனால் பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்கள் முழுதும் மற்றும் அடையாறு மண்டலத்தில் வேளச்சேரி, திருவான்மியூர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.
மேலும், பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் உள்ள, 23 ஆயிரம் வீடுகளுக்கும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.
'பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, குடிநீரை பிடித்து சேமித்து வைத்துக் கொள்ளவும். அவசர தேவைக்கு, லாரி குடிநீர் வழங்கப்படும்' என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.