சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் வட்டார போக்குவரத்து அலுவலகம், ஓ.எம்.ஆர்., சிக்னல் அருகே உள்ள ஒரு வாடகை கட்டடத்தில், முதல் மாடியில் செயல்படுகிறது.
சாய்வுதளம், மின்துாக்கி இல்லாமல், குறுகிய மாடிப்படியாக உள்ளதால், மாற்றுத்திறனாளிகள் செல்ல முடியாது. இதனால், 'வட்டார போக்குவரத்து அதிகாரி அல்லது இதர ஊழியர்களை சந்திக்க, மாடிப்படி ஏறி செல்ல தேவை இல்லை.
மாறாக, அதிகாரிகள், ஊழியர்கள் தரைத்தளம் வந்து, மாற்றுத்திறனாளிகளை சந்தித்து அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்வர்' என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு, 044 --- -2450 3939 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.