திருப்பூர்:கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு கோடையில், தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. அதே சமயம், 23 மாவட்டங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தமிழக நீர்வள ஆதாரத்துறை, மே மாதம், சென்னை தவிர, மாநிலத்தில் உள்ள 37 மாவட்டங்களில் நிலவிய நிலத்தடி நீர்மட்ட அளவுகளை வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு தமிழகத்தில் 23 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது; 13 மாவட்டங்களில் சரிந்துள்ளது. மயிலாடுதுறை புதிய மாவட்டம் என்பதால், கடந்தாண்டு அளவு இல்லை. நீர்மட்ட உயர்வில், கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி, திருப்பத்துார், கோவை மாவட்டங்கள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன.
நிலத்தடி நீர்மட்டம் சரிவில், தென்காசி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் நீர்மட்டம் சரிந்துள்ளது.
கோவை 12.65 9.94திருப்பூர் 8.49 7.02நீலகிரி 2.71 3.10திண்டுக்கல் 8.36 5.66ஈரோடு 8.78 5.73