துரைப்பாக்கம், ஓ.எம்.ஆர்., பெருங்குடி சுங்கச்சாவடி அருகே உள்ள வள்ளலார் சன்மார்க்க அரங்கத்தில், 'நம்மஊரு புத்தகத் திருவிழா' என்ற தலைப்பில், நேற்று முன்தினம், புத்தக கண்காட்சி துவங்கியது.
சோழிங்கநல்லுார் தொகுதி நலச்சங்கங்களின் பேரமைப்பு, அறிவியல் இயக்கம், ஐ.டி., ஊழியர்கள் சங்கம், ஸ்ரீசாய்நகர் மக்கள் சங்கம், பாரதி புத்தகாலயம் இணைந்து, கண்காட்சியை நடத்துகின்றன.
இதில், 100 பதிப்பகங்களில் 1,000 தலைப்புகளில், ஒரு லட்சம் நுால்கள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகளுக்கான நுால்கள் உள்ளன. அனைத்து நுால்களுக்கும், 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
வரும், 20ம் தேதி வரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது.