உள்ளகரம், பெருங்குடி மண்டலம், 185வது வார்டு, உள்ளகரம், நங்கநல்லுார் 100 அடி சாலையை ஒட்டி 'அம்மா' உணவகம் உள்ளது.
கூலி தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்கள் என நுாற்றுக்கணக்கானோர், தினம் வந்து உணவருந்துகின்றனர். உணவக சுவரை ஒட்டி, குப்பை தொட்டிகள் வரிசையாக அமைக்கப்பட்டு உள்ளன.
சுற்று வட்டாரப் பகுதி களில் சேகரமாகும் குப்பை, இந்த தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. பல மணி நேரத்திற்கு பின், லாரி வாயிலாக குப்பை அகற்றப்படுகிறது.
அதற்குள், உணவு தேடி அங்கு வரும் கால்நடைகள், குப்பையை சாலையில் பரப்புகின்றன. இதனால் எழும் துர்நாற்றத்தால், 'அம்மா' உணவகத்தின் உள்ளே சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றனர்.
மாநகராட்சி சுகாதாரத் துறையினர், இதுகுறித்த புகாரை கண்டுகொள்ளவில்லை. துறை அதிகாரிகள் பார்வையிட்டு, குப்பை தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.