கோயம்பேடு, கோயம்பேடில் பாழடைந்துள்ள மாநகராட்சி வார்டு அலுவலக கட்டத்தை இடித்து, புது கட்டம் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கோடம்பாக்கம் மண்டலம், 127 வது வார்டு அலுவலகம் கோயம்பேடு அய்யப்பா நகர் பிரதான சாலையில் இயங்கி வருகிறது.
இங்கு, உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர், வரி வசூலிப்பாளர், துப்பரவு ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் அலுவலகம் உள்ளது. இங்கு 127 வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்திற்கும் இடம் உள்ளது.
இந்த கட்டடம், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், சிதிலமடைந்து, போதி இட வசதியின்றி உள்ளது. பாழடைந்த கட்டடம் என்பதால், கவுன்சிலர் தனி அலுவலகம் கேட்டுள்ளார். எனவே, இந்த கட்டடத்தை இடித்து, இரண்டு மாடி புது கட்டடம் கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, 90 லட்சம் ரூாபய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில், பாழடைந்த கட்டடத்தை இடித்து புது வார்டு அலுவலகம் கட்டப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.