கிருஷ்ணகிரி:''சிண்டிகேட் அமைக்கும் வியாபாரிகள் மற்றும் தொழிற்சாலை முதலாளிகள், மா விவசாயிகளை வஞ்சித்து வருகின்றனர்,'' என, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநிலத்தலைவர் ஆலயமணி கூறினார்.
இது குறித்து அவர் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், விவசாயிகள் வஞ்சிக்கப்படும் நிலை தொடர்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின், முதுகெழும்பு தொழிலாக உள்ளது, மா விவசாயம். முக்கிய தொழிலான இந்த மாங்கனி தொழிலை கண்டு கொள்ளாமல் விவசாயிகளை, அரசு, தொழிலதிபர்கள், வியாபாரிகள் வஞ்சித்து வருகின்றனர்.
மாம்பழக்கூழ் தொழிற்சாலையை நடத்தக் கூடியவர்கள் உள்மாநில பழங்களை வாங்காமல், வெளி மாநிலத்திலிருந்து அதிகமாக வாங்குகின்றனர்.
வியாபாரிகள், தொழிற்சாலை முதலாளிகள் ஒன்று சேர்ந்து, சிண்டிகேட் அமைத்து, விலையை நிர்ணயம் செய்கிறார்கள். விளைவிப்பவர்களே அதற்கான விலையை நிர்ணயிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த அரசு, தொழிலதிபர்கள், வியாபாரிகள் இந்நிலையை மாற்றிக் கொள்ளாவிடில், விவசாயிகளை திரட்டி, மாபெரும் முற்றுகை போராட்டத்தை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.