சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டத்தில், கடன் பெற்று வீடு கட்டாமல் அரசை ஏமாற்றிய மூன்று ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பிள்ளையார்குப்பம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மனோகுமார், 35, கோவிந்தாங்கல் தொடக்கப்பள்ளி ஆசிரியர் விஸ்வநாதன், 40, சூரை தொடக்கப்பள்ளி ஆசிரியர் சாத்ராக், 39.
இவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன், திருவள்ளூர் மாவட்டத்தில் வீடு கட்ட கடன் பெற்றனர். மனோகுமார், 23 லட்சம் ரூபாய்; விஸ்வநாதன், 22.50 லட்சம் ரூபாய்; சாத்ராக், 17 லட்சம் ரூபாய் கடனாக வாங்கினர். ஆனால், மூவரும் வீடு கட்டவில்லை.
இது குறித்து, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' பிரிவுக்கு புகார் சென்றதன் அடிப்படையில், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, மூவரையும் சஸ்பெண்ட் செய்து, ராணிப்பேட்டை தொடக்க கல்வி அலுவலர் பிரேமலதா உத்தரவிட்டார்.