சேலம்:பகுதி நேர வேலை தருவதாக, பட்டதாரியிடம், 2 லட்சம் ரூபாய் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம், தாதகாப்பட்டி, வேலு புதுத்தெருவை சேர்ந்த பட்டதாரி பிரபு, 31, பகுதி நேர வேலை தேடி வந்தார். அவரது மொபைல் போனுக்கு மே 23ல், ஆன்லைனில் பகுதி நேர வேலை விளம்பரம் வந்தது. அதில் தெரிவித்த, 'வாட்ஸ் ஆப்' எண்ணில், தன் விருப்பத்தை தெரிவித்தார். சில நிமிடங்களில் வந்த தகவல் மூலம், 'செயலி'யை பதிவிறக்கி, சுய விபரங்களை தெரிவித்தார்.
தொடர்ந்து வந்த தகவல்படி வேலைக்கு முன்பணம், 2 லட்சத்து, 1,959 ரூபாயை செலுத்தினார். பணம் சென்றடைந்த நிலையில், விளம்பரம் வந்த மொபைல் போன் எண் அணைத்து வைக்கப்பட்டது. பிரபு புகாரில், சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.