திருப்பூர்:ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஆறு மாநிலங்களுக்கு விஜய யாத்திரை மேற்கொண்டு, காசியில் 'சாதுர்மாஸ்ய விரத' சிறப்பு பூஜை வழிபாடு மேற்கொள்கிறார்.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நாடு முழுதும் விஜய யாத்திரையை துவக்கியுள்ளார். இதன்படி, திருமடங்களில் தங்கி, சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்துகிறார்.
பல்வேறு மாநிலங்களில் சிறப்பு பூஜை நடத்தி, அருளாசி வழங்கி, உத்தரபிரதேச மாநிலம் செல்லும் சுவாமிகள், விஜய யாத்திரையின் முக்கிய நிகழ்வான, 'வியாச பூஜை' மற்றும், சாதுர்மாஸ்ய விரத பூஜைகளை நடத்துகிறார்.
வரும், 29 முதல், ஜூலை 5ம் தேதி வரை, பிரயக்ராஜில் தங்கும் சுவாமிகள், பெனிபந்த் ஸ்ரீசங்கர விமான மண்டபத்தில் தங்கி, ஜூலை 3ம் தேதி, 'வியாச பூஜை' நடத்தி, அருளாசி வழங்க உள்ளார்.
ஜூலை 6ம் தேதி முதல் செப்., 29ம் தேதி வரை, வாரணாசியில் தங்கும் சுவாமிகள், ஹனுமன்காட்டில் உள்ள, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் காசி கிளையில் தங்கி, அருளாசி வழங்குகிறார்.
விஜய யாத்திரையின் முக்கியத்துவம் பெற்ற வழிபாடாக கருதப்படும், 'சாதுர்மாஸ்ய விரதம்' பூஜைகளை மேற்கொண்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்க உள்ளார்.