தஞ்சாவூர்:விசாரணை என்ற பெயரில், போலீசார் தினமும் தொந்தரவு செய்வதாக, தஞ்சாவூர் நகை தயாரிப்பு பட்டறை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர், கீழ அலங்கம் பகுதி மதுக்கூடத்தில், மே 21ல் மது குடித்த குப்புசாமி, விவேக் இறந்தனர். பிரேத பரிசோதனையில் அவர்கள் உடலில் சயனைடு கலந்திருப்பது தெரிந்தது.
நகை தயாரிப்பு பட்டறையில் இந்த சயனைடு வாங்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால், 15 நாட்களுக்கு மேலாக, போலீசார் அடிக்கடி நகை தயாரிப்பாளர்களின் பட்டறைக்கு சென்று ஆய்வு நடத்துவதும், விசாரணை என்ற பெயரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வதும் தொடர்கிறது.
இதை கண்டித்து, தஞ்சாவூர், ஐயங்கடை தெருவில் உள்ள நகை தயாரிப்பாளர்கள், 200க்கும் மேற்பட்ட பட்டறைகளை அடைத்து, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகை தயாரிப்பாளர்கள் மீது வீண் பழி சுமத்தி, வழக்கு போட போலீசார் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.