கோயில்
வைகாசி பெருந்திருவிழா 14 ம் நாள் சாந்தி உற்சவ சாந்தி அலங்காரத் திருமஞ்சனம்: ஆஸ்தானம் எழுந்தருளல், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, காலை 10:30 மணி.
97ஆண்டு உற்ஸவப் பெருவிழா : வடக்கு வாசல் காளியம்மன் கோயில், தமிழ்ச் சங்கம் ரோடு, மதுரை, இரவு 9:00 மணி.
மண்டல பூஜை: கல்யாண விநாயகர் கோயில், தமிழ் இசைச் சங்கம், ராஜாமுத்தையா மன்ற வளாகம், மதுரை, காலை 7:00 மணி. மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு
வில்லிபாரத தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - திருச்சி கல்யாணராமன், வசுதாரா கருத்தரங்கு கூடம், ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரஹம் நெல்லை பாலு, மாலை 6:30 மணி.
திருவாசகம் : நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00மணி.
பாண்டுரங்க மாஹாத்மியம்: நிகழ்த்துபவர் - ஜலேந்திரன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.
பள்ளி கல்லுாரி
மாணவர்களுக்கு படிப்பிடைப் பயிற்சி: ஆண்ட்ரூஸ் குடில் காந்தி மியூசியம், மதுரை, தலைமை: கல்வி அலுவலர் நடராஜன், சிறப்பு சொற்பொழிவு: மன்னர் திருமலைநாயக்கர் கல்லுாரி பேராசிரியர் மல்லிகா, காலை 10:30 மணி.
பொது
வணிகர்கள் குறை தீர் முகாம்: வணிகவரித்துறை அலுவலகம், சட்டக்கல்லுாரி அருகில், மதுரை, காலை 10:00 மணி.
அ.தி.மு.க., மாநாடு நடக்கவுள்ள இடம் ஆய்வு: வலையங்குளம் ரிங் ரோடு பகுதி, மதுரை, பங்கேற்பு: மாவட்ட செயலாளர்கள் செல்லுார் ராஜூ, ராஜன்செல்லப்பா, உதயகுமார், காலை 11:00 மணி.
மின்குறை தீர் முகாம்: உதவி செயற்பொறியாளர் அலுவலகம், மேலுார், பங்கேற்பு: மின் மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன், காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.
சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத்துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.