கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில், ஜமாபந்தி நிகழ்ச்சியில் மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.
குளித்தலை ஆர்.டி.ஓ., புஷ்பாதேவி தலைமை வகித்தார். ஜமாபந்தி நான்கு நாட்கள் நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் நடந்த ஜமாபந்தியில் கட்டளை, ரெங்கநாதபுரம், பாலராஜபுரம், மாயனுார், மணவாசி ஆகிய பகுதியில் இருந்து மக்களிடம் கோரிக்கை மனுக்கள்
பெறப்பட்டன.
நேற்று திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம் தெற்கு, வடக்கு, சேங்கல், முத்துரெங்கம்பட்டியில் மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. இன்று சிந்தலவாடி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட மகாதானபுரம், வடக்கு, தெற்கு, கம்மநல்லுார், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, பிள்ளபாளையம், கருப்பத்துார் ஆகிய இடங்களிலும்.
நாளை பஞ்சப்பட்டி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட வயலுார், பாப்பாகப்பட்டி, சிவாயம், வடக்கு, தெற்கு, வீரியபாளையம், போத்துரவூத்தன் பட்டி ஆகிய பகுதிகளுக்கு ஜமாபந்தி நடக்கிறது.
கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ், மண்டல தாசில்தார் இந்துமதி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.