நாமக்கல்: திருவாரூர் மாவட்டத்திலிருந்து, சரக்கு ரயில் மூலம் நாமக்கல்லுக்கு ரேஷன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களும், கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு தேவையான மக்காச்சோளம், தவுடு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும், தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மற்றும் ஆந்திரா, தெலுங்கான உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.
அதன்படி, நாமக்கல் மாவட்ட ரேஷன் கடைகளுக்கு தேவையான, 1,250 டன் அரிசியை திருவாரூர் மாவட்டத்திலிருந்து, 21 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம், நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, அங்கிருந்து லாரிகளில் ஏற்றி, நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு இருப்பு வைக்க கொண்டு செல்லப்பட்டது.