ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரை அடுத்த கொளக்காட்டு புதுாரில், புது வெங்கரை காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது.
விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு, கொங்கு ஒயிலாட்டம் ஆரம்பித்து நள்ளிரவு, 11:30 மணி வரை நடந்தது. தொடர்ந்து வாணவேடிக்கையும் நடந்ததால், சுற்று வட்டார முதியவர்கள், குழந்தைகள் துாக்கமின்றி தவித்தனர்.
கோவில் நிர்வாகம் ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில், 10:00 மணி வரை கலைநிகழ்ச்சி நடத்த அனுமதி பெற்றனர். ஆனால், நள்ளிரவு வரை போலீஸ் பாதுகாப்புடன் கலை நிகழ்ச்சி நடந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன், பரமத்தி வேலுார் சுற்றுவட்டார பகுதிகளில் மாரியம்மன் திருவிழாவில் நடந்த கலை நிகழ்ச்சியை, 10:00 மணிக்கு மேல் நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. இதற்கு மட்டும் சிறப்பு அனுமதி கொடுத்தது யார்? என கேள்வி
எழுந்துள்ளது.
இதுகுறித்து, ப.வேலுார் இன்ஸ்பெக்டர் இந்திராணியிடம் தொலைபேசியில் கேட்டபோது, ''புது வெங்கரை காளியம்மன் கோவில் கும்பாபிஷேக கலை நிகழ்ச்சிக்கு, 10:00 மணி வரை மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது,'' எனக்கூறி போன் இணைப்பை
துண்டித்தார்.