நாமக்கல்:ஆன்லைனில் கடன் வாங்கிய மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல், கரட்டு மேடைச் சேர்ந்த லாரி டிரைவர் குமரன் மகன் லோகேஷ்வரன், 22; கரூர் தனியார் பொறியியல் கல்லுாரி மாணவரான இவர், இறுதியாண்டு தேர்வு முடிவுக்காக காத்து இருந்தார்.
லோகேஷ்வரன் ஆன்லைன் செயலியில், 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, 5,000 ரூபாயை திருப்பி செலுத்திய நிலையில், மீதியை செலுத்தும் தவணை தேதி முடிந்தது.
பணத்தை திருப்பி கேட்பதற்காக, கடன் செயலி நிறுவனத்தினர் லோகேஷ்வரனை தொடர்பு கொண்ட போது, அவர் முறையாக பதிலளிக்காததால், பெற்றோரை தொடர்பு கொண்டு உள்ளனர்.
கடன் வாங்கிய விபரம் பெற்றோருக்கு தெரிந்ததால், மனமுடைந்த லோகேஷ்வரன் நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆன்லைன் ரம்மி விளையாட லோேகஷ்வரன் கடன் பெற்றாரா என்ற கோணத்தில், நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.