ரூ.12 கோடியில் 42 வகுப்பறைகள் மணலி மண்டல கூட்டத்தில் தீர்மானம்
Added : ஜூன் 09, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
 Resolution of 42 classrooms at Rs.12 crore in Manali Mandal meeting   ரூ.12 கோடியில் 42 வகுப்பறைகள் மணலி மண்டல கூட்டத்தில் தீர்மானம்



திருவொற்றியூர், மணலி மண்டல குழு கூட்டத்தில், 11.95 கோடி செலவில், 42 பள்ளி வகுப்பறைகள் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை, மணலி மண்டல குழு கூட்டம், நேற்று காலை, மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

மண்டல உதவி கமிஷனர் கோவிந்தராசு, செயற்பொறியாளர் பிரதீப் மற்றும் கவுன்சிலர்கள், பிற துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், 18 வது வார்டு சாலைமா நகரில், 12 அங்கன்வாடி வகுப்பறைகள், 2.88 கோடி ரூபாய் செலவிலும், 19வது வார்டு எம்.எம்.டி.ஏ., 59வது தெருவிலுள்ள துவக்கப் பள்ளிக்கு, 15 வகுப்பறைகள், 3.80 கோடி செலவிலும் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மஞ்சம்பாக்கம் நடுநிலைப் பள்ளிக்கு, 1.17 கோடி ரூபாயில், நான்கு வகுப்பறைகள், 21வது வார்டு பாடசாலை தெரு உயர் நிலைப் பள்ளிக்கு, 2.20 கோடி ரூபாய் செலவில் எட்டு வகுப்பறைகள், தொடக்கப் பள்ளிக்கு, 1.90 கோடி ரூபாய் செலவில் ஆறு வகுப்பறைகள் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தவிர, 20வது வார்டு காமராஜர் சாலை மயான பூமி, 1.60 கோடி ரூபாய் செலவிலும், 22வது வார்டு சின்னசாமி தெருவில், 1.50 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு திடல் அமைக்கும் பணி என, 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அப்போது, 21வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ஜி.ராஜேஷ் சேகர் பேசியதாவது:

மண்டல அலுவலகம் இருக்கும் இடத்தில், அதிகளவில் மாசு ஏற்படுவதால் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உடல்நிலை பாதிக்கப்படுகின்றனர். எனவே, மண்டல அலுவலகத்தை மாற்ற வேண்டும்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதே கடிதம் வழங்கியிருந்தேன். அம்மா உணவகத்தில், சப்பாத்தி மாவு வருவதில்லை. தெருவிளக்குகள் சரியாக பொருத்தப்படுவதில்லை. நெடுஞ்செழியன் தெரு, பாடசாலை தெருவில் கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும்.மண்டலம் முழுதும், குறிப்பாக, 21வது வார்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி குறித்த விபரங்கள் வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.



மறுப்பு




மணலி மண்டல குழு தலைவர் ஆறுமுகம் பேசியதாவது:

தற்போது செயல்படும் மண்டல அலுவலகம், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அப்போது, 20வது வார்டு கவுன்சிலராக, எதிர்ப்பு தெரிவித்து கடிதம் வழங்கியிருந்தேன். ஆனால், இந்த இடத்தில் தான் கட்டுவோம் எனக் கூறினர்.

எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த கட்டட பூமி பூஜை குறித்த தகவலே எனக்கு தரவில்லை. அ.தி.மு.க., செய்த தவறு. மக்கள் வரிப்பணம் வீணடிக்க விருப்பமில்லை. இருப்பினும், கோரிக்கை பரிந்துரை செய்யப்படும்.

மண்டல கூட்டத்திற்கு, தாசில்தார் வராதது குறித்து வருத்தம். வருவாய் துறை சார்ந்து பல்வேறு கோரிக்கைகள் மன்றத்தில் வைக்கப்படுகின்றன. மழைநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளும் போது, வாகன போக்குவரத்திற்கு வழி விட்டு, பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.



பள்ளிகளை தயார்படுத்துங்கள்




கூட்டத்தில், மணலி மண்டல உதவி கமிஷனர் கோவிந்தராசு கூறியதாவது:

மணலி மண்டலத்தில், 17 அரசு, மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. பள்ளி திறப்பு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சிவில், எலக்ட்ரிகல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வகுப்பறைகள் தயாராக உள்ளதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்து, 11ம் தேதிக்குள், பணிகளை முடித்திருக்க வேண்டும்.

அம்மா உணவகம், நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில், சுகாதார துறை அதிகாரிகள் விரைந்து ஆய்வு மேற்கொண்டு, உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X