சென்னை, உயரதிகாரி எனக் கூறி, மோசடி செய்த பி.எஸ்.என்.எல்., ஊழியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:
பெரியார் நகர், பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தின் கீழ், இளநிலை இன்ஜினியராக சத்திய நாராயணன் என்பவர் பணியாற்றினார். இவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக, பி.எஸ்.என்.எல்., லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதில், கேபிள் திருட்டில், உயர் அதிகாரிகள் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு, சத்திய நாராயணன் பணம் பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து, பிப்ரவரியில் பி.எஸ்.என்.எல்., உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பணி நீக்கம் முடிந்து, கடந்த 1ம் தேதி மீண்டும் பணிக்கு திரும்பிய நிலையில், சத்திய நாராயணனை பெரியார் நகரில் இருந்து, மந்தைவெளிக்கு பணியிடமாற்றம் செய்து மனிதவள துணை பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு கூறினர்.