வில்லிவாக்கம், சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும், வைகாசி பெருவிழாவை ஒட்டி, பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
முதல் நாளான நேற்று காலை, கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது.
தொடர்ந்து, காலை 7:00 மணிக்கு, துவஜா ரோஹணம் கேடயம் உற்சவத்தில், சுவாமி மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று இரவு 8:00 மணிக்கு, சிம்ம வாகன உற்சவம் நடந்தது.
இன்று காலை 7:00 மணிக்கு கேடயம் உற்சவமும், இரவு 8:00 மணிக்கு ஹம்ஸ வாகன உற்சவமும் நடைபெறுகிறது. நாளை சனிக்கிழமை காலை, கருடசேவை உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, 17ம் தேதி வரை காலையும், மாலையும் பிரம்மோற்சவம் நடக்கிறது.