ஆவடி, ஆவடி தாசில்தார் அலுவலகத்தில், நேற்று காலை ஜமாபந்தி நிகழ்ச்சி துவங்கியது.
திருமுல்லைவாயில், தென்றல் நகர் மேற்கு பகுதியில் கட்டப்படும் துணை மின் நிலையத்தை திறக்க கோரி, அப்பகுதி மக்கள், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஜெபராஜ் பவுலினிடம், மனு அளித்தனர்.
அதன் விபரம்:
எட்டு ஆண்டுகளுக்கு முன், 5 கோடி மதிப்பில் துவங்கப்பட்ட இப்பணிகள் இன்னும் முடியவில்லை.
இதனால், திருமுல்லைவாயில், தென்றல் நகரைச் சுற்றியுள்ள, சரஸ்வதி நகர், வள்ளலார் நகர், மூர்த்தி நகரில் வசிக்கும் 2,000க்கும் மேற்பட்டோர், தொடர் மின்வெட்டால் அவதிப்படுகின்றனர்.
'ஏசி, ப்ரிஜ்' உள்ளிட்ட மின்சாதனங்கள் அடிக்கடி சேதமடைகின்றன. அதனால், துணை மின் நிலையத்தை திறக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டது.