ஆர்.கே. நகர், கொருக்குப்பேட்டை, ஜே.ஜே.நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன், 29; மணலி மத்திய அரசு நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் பாலத்தில் நடந்து சென்றார்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், சீனிவாசனுக்கு 'லிப்ட்' தருவதாகக் கூறி ஏற்றியுள்ளனர். சிறிது துாரம் சென்றதும், அங்கிருந்த நண்பர் ஒருவருடன் சேர்ந்து, மூவரும் சீனிவாசனை சரமாரியாக தாக்கி, அவரிடமிருந்த 1,500 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினர்.
இது குறித்த புகாரின்படி, ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து, தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், 27, சஞ்சய், 20, கல்லுாரி மாணவரான வேலன், 18, ஆகிய மூவரை, நேற்று கைது செய்தனர்.
ஒரு கத்தி மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.