மதுரவாயல், சென்னை, மதுரவாயல், சக்கரபாணி நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், 'ஆன்லைன் லோன் ஆப் ஸ்மார்ட் கிரெடிட்' வாயிலாக, 91 ஆயிரத்து 740 ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
அந்த பெண், தான் வாங்கிய மொத்த பணத்தையும் கட்டி முடித்ததாக தெரிகிறது. இந்நிலையில், அதிகமாக பணம் கேட்டு, மர்ம நபர் ஒருவர் மிரட்டியுள்ளார். பணத்தை செலுத்தாவிட்டால், பெண்ணின் முகத்தை 'மார்பிங்' செய்து, ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து அந்த பெண், மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். மிரட்டிய மர்ம நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.