விழுப்புரம் : கண்டாச்சிபுரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிராக்டர் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த வீரங்கிபுரத்தைச் சேர்ந்த மனோகர் மகன் குமார், 32; டிராக்டர் டிரைவர். இவர், கடந்த 5ம் தேதி இரவு 17 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்று, அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது, சிறுமி சத்தம் போட்டதால், தப்பியோடி விட்டார்.
இது குறித்து, மறு நாள் காலை, அந்த சிறுமியின் தந்தை, குமாரின் வீட்டிற்கு சென்று தட்டி கேட்டதால், அவரை சாதி பெயரைக் குறிப்பிட்டு திட்டி, மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், குமார், அவரது தந்தை மனோகர் உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ மற்றும் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு பிரிவிலும் வழக்குப் பதிந்து, குமாரை நேற்று கைது செய்தனர் .