திண்டுக்கல்-திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி அறிக்கை,திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழே நீர்நிலைகளை புனரமைத்தல்,பூங்கா, விளையாட்டு மைதானம், செயற்கை நீருற்றுகள், தெரு விளக்குகள் புதிதாக அமைப்பது, உயர் மின் கோபுரங்கள் அமைப்பது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது,மரம் நடுதல்,பள்ளி,கல்லுாரிகள்,நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுற்றுச்சுவர் கட்டுவது, பாலம்,வடிகால், ரோடுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான அரசு சார்பில் 2023-2024 ஆண்டிற்கு ரூ.1 .55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை செய்ய தனிநபர்,குழுக்கள்,சங்கத்தினர்,கல்விநிறுவனங்கள்,லயன்ஸ் கிளப்,ரோட்டரி கிளப்,பொது மக்கள் நிறுவனங்களிடமிருந்து உரிய இசைவு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அதில் 50 விழுக்காடு தொகை மட்டும் செலுத்தினால் போதுமானது. இதை பொது மக்கள் பயன்படுத்தி உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.