சாணார்பட்டி--சாணார்பட்டி ஒன்றிய பகுதிகளில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டு தரமாகவும், விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.
கூவனுாத்து ஊராட்சி நொச்சிஓடைபட்டியில் கட்டப்பட்டு வரும் பால் கூட்டுறவு சங்க கட்டடம், குரும்பப்பட்டியில் ஊராட்சி அலுவலக கட்டடம், டி.பஞ்சப்பட்டி ஊராட்சி கொசவபட்டியில் பேவர் பிளாக் , சமுதாய மயான காத்திருப்போர் கட்டடம் ,சுற்றுச்சுவர் ,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கழிப்பறை, வகுப்பறை கட்டடம், பள்ளி கட்டடம், சமையலறை புதுப்பித்தல், அஞ்சுக்குழிப்பட்டி ஊராட்சி கன்னியாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வகுப்பறை கட்டடம் ,சமையலறை புதுப்பித்தல் பணிகளை பார்வையிட்டடதோடு, தரமாக ம விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
நொச்சிஓடைப்பட்டி நியாயவிலைக்கடையில் பொருட்களின் தரம், கோபால்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் புளி தயாரிப்பு மதிப்பீட்டுக் கூடத்தை ஆய்வு செய்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளையராஜா, அருள்கலாவதி, உதவிப்பொறியாளர் ஜான்பிரிட்டோ, துணை வட்டார வளர்ச்சி ராஜேஸ்வரி, ஊராட்சி தலைவர்கள் முத்துலட்சுமி சத்யராஜ், சலேத் மேரி ஜான்பீட்டர், தேவி ராஜா சீனிவாசன், கந்தசாமி, ஊராட்சி செயலர்கள் கோபாலகிருஷ்ணன், ஜான் கென்னடி, அனுசியா உடனிருந்தனர்.