பழநி-- பழநியில் சர்க்கரை செட்டியார் 105 வது பிறந்தநாள் விழா , அவர் துவங்கிய ஸ்தாபனத்தின் 76 வது பவள விழா கொண்டாட்டப்பட்டது.
பழநி காந்தி ரோடு பகுதியில் உள்ள எம்.சர்க்கரை செட்டியார், பி.சுப்பையன் செட்டியார் பாத்திரக்கடை 76 வது ஆண்டு பவள விழா, இந்நிறுவனங்களை துவங்கிய சர்க்கரை செட்டியார் 105 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றவர்களை உரிமையாளர் ராஜேந்திரன்,மல்லிகா வரவேற்றனர். பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
டாக்டர் பிரபு, ராகவி, பழநி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜே.பி.சரவணன், சரவண பொய்கை, கந்த விலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், ராஜேந்திரன், பிரகாஷ், ஜெகதீஷ், மேலாளர் நாகராஜன், முருகன்பாத்திரக்கடை உரிமையாளர் கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.
பங்கேற்றவர்களுக்கு ஜெகநாதன்,செல்வமணி நன்றி கூறினர்.