ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய, 38 போலீசார் ஈரோடு, கோபி மதுவிலக்கு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது, கள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க, ஈரோடு, கோபியில் மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இந்த ஸ்டேஷனில் பணியாற்றிய போலீசார், பிற ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட, 38 போலீசார் ஈரோடு, கோபி மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் மற்றும் ஆசனுார் மதுவிலக்கு சோதனைசாவடிக்கு இடமாற்றம் செய்து, எஸ்.பி.ஜவகர் நேற்று முன்தினம்
உத்தரவிட்டார்.
இதன்படி எஸ்.எஸ்.ஐ.,க்கள் ஈரோடு தெற்கு சின்னசாமி, ஆப்பக்கூடல் ஹரிதாஸ், ஏட்டுகள் செந்தில்குமார், வெங்கடாச்சலம், அங்கப்பன், இம்தியாஸ் அகமது, தங்கமணி, டிரைவர் சஞ்சீவ் உட்பட, 17 பேர் ஈரோடு மதுவிலக்கு பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.
எஸ்.எஸ்.ஐ.,க்கள் சிறுவலுார் கருப்புசாமி, கடத்துார் ரகுநாதன், ஏட்டுகள் செல்வன், காசிலிங்கம், லதா, சிவகுமார், ஜாகீர், டிரைவர் ராஜேந்திரன் உட்பட, 17 பேர் கோபி மதுவிலக்கு பிரிவுக்கு மாற்றப்பட்டனர். எஸ்.எஸ்.ஐ.,க்கள் பங்களாபுதுார் பெருமாள், பெருந்துறை எட்வின் டேவிட், ஏட்டுகள் மாரிமுத்து, செந்தில்நாதன் ஆகியோர் ஆசனுார் மதுவிலக்கு சோதனை சாவடிக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏற்கனவே மதுவிலக்கில் பணியாற்றி வரும், 28 போலீசாருக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.