ஈரோடு: ஈரோடு, ஜீவானந்தம் சாலையில் உள்ள கள்ளுகடைமேட்டில், ஆற்றல் அறக்கட்டளை சார்பில், சிறப்பு மருத்துவ மையம் தொடக்க விழா நடந்தது. இதில் ஆற்றல் அசோக்குமார் பேசியதாவது:
ஆற்றல் அறக்கட்டளை தொடர் சமுதாய சேவை வரிசையில், இன்று மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன் நாட்களில், காலை, 10:௦௦ மணி முதல், 12:௦௦ மணி வரை மருத்துவ சேவை அளிக்கப்படும். திங்கள், புதன், சனி நாட்களில் மாலை, ௪:௦௦ மணி முதல் இரவு, 8:௦௦ மணி வரை மருத்துவ சேவை
அளிக்கப்படும்.
சிறு சிறு நோய், முழங்கால் வலி, வாந்தி-வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், பெண்கள் உடல் உபாதா என, 18 வகையான நோய்களுக்கு தரமான மருத்துவ சேவையை பெறலாம். இதற்கு பத்து ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறப்படும். ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில், பல்வேறு சமுதாயப் பணிகளை ஆற்றல் அறக்கட்டளை மூன்றாண்டுகளாக செய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.