கரூர்: முதியவர் எரித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில்,- குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், மாயனுார் அடுத்த ராசா கவுண்டனுாரை சேர்ந்தவர் கருப்பண்ணன், 72. இவர், நேற்று முன்தினம் மேட்டாங்கிணற்றில், உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், உடல் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சொத்து பிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா எனக்கூறி அவரது உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, காந்திகிராமம், திருச்சி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
இதையடுத்து, உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடலை பெற்றுக் கொள்வதற்கு முன்பாக வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என்று போலீசார் கூறியதையடுத்து, அனைவரும் கலைந்துசென்றனர்.
இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது