நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல் மாவட்ட, திட்டமிடும் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஊரக பகுதிக்கென எட்டு, நகர்ப்புற பகுதிக்கென நான்கு உறுப்பினர்கள் என மொத்தம், 12 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். ஏற்கனவே வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் டவுன் பஞ்சாயத்து உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் தகுதியானவர்கள்.
வேட்புமனுக்கள் மாவட்ட ஊராட்சி அலுவலகம், அனைத்து நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து அலுவலகங்களில் கிடைக்கும். வேட்புமனுக்களை நாமக்கல் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் தாக்கல் செய்யவேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலராக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊரகப்பகுதிக்கான உதவி தேர்தல்நடத்தும் அலுவலராக உதவி திட்டஅலுவலர் செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். நகர்ப்புறத்தில் நகராட்சிக்கு ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உமா மற்றும் டவுன் பஞ்சாயத்துக்கு மாவட்ட ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் ஆகியோர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை, 11:00 முதல் மாலை, 3:00 மணிக்குள் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். 12 காலை பரிசீலிக்கப்படும். வேட்புமனு திரும்ப பெற்றுக்கொள்வோர் அதற்கான அறிவிப்பை, 14 மாலை, 3:00 மணிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கலாம்.
தேர்தலில் போட்டியிருக்குமானால் வரும், 23 கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை, 10:00 முதல் மாலை, 3:00 மணி வரை
ஓட்டுப்பதிவு நடைபெறும். ஓட்டுப்பதிவு முடிவடைந்தவுடன் அன்றையதினமே
ஓட்டுகள் எண்ணப்பட்டு
முடிவுகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு கூறியுள்ளார்.